BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மிஸ் பண்ணிடாதீங்க.. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. APPLY NOW..!!
இந்தியா முழுவதும் நடைபெறும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி மருத்துவ படிப்புகளுக்காக மாணவர்களை தேர்வு செய்கிறது.
நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை தேர்வு எழுத முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி இவை தொடங்கிய நிலையில், காலகெடுவானது கூடுதலாக நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை வழங்கப்பட்டது. இன்று நள்ளிரவு 11:30 மணிக்குள் தேர்வர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் கட்டணம் செலுத்த இறுதி நேரமாக 11:59 வரை கொடுக்கப்பட்டுள்ளது.