இந்தியா

வீட்டின் உள்ளே அசைந்த பெரும் உருவம்!! ஓட்டை வழியே எட்டி பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

Summary:

tiger sleep on bed inside house

அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அதனால் மக்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சக்கணக்கான பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக அளவில் புகழடைந்த காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவில் வெள்ளத்தால் ஏராளமான உயிர்கள் உயிரிழந்தது. மேலும் பல விலங்குகள் வெள்ளத்தில் வேறு இடங்களுக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது.

assam flood க்கான பட முடிவு

 இந்நிலையில் நெடுஞ்சாலையின் அருகில் உள்ள வீடு ஒன்றின் மெத்தையில் வெள்ளத்தில் தப்பிய புலி ஒன்று படுத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழை வெள்ளத்தால் அடித்து வெளியேறிய, பூங்காவை சேர்ந்த புலியானது மிகவும் சோர்வுடன்  வீட்டிற்குள் சென்று மெத்தையில் படுத்துக் கொண்டது. இந்நிலையில் வீட்டின் உள்ளே ஏதோ இருப்பது போன்று உணர்ந்த வீட்டின் உரிமையாளர் இடைவெளி வழியே பார்த்துள்ளார். 

அப்பொழுது புலியை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் புலியை பாதுகாப்பாக வெளியேற்றி பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
 


Advertisement