
thripura - chiep minister - push ap
நிகழ்ச்சி மேடையிலேயே 45 புஷ்-அப் செய்து சவாலில் வென்று அசத்தி உள்ளார் திரிபுரா முதல்வர் பிப்லப் டெப் இதனால், அங்கு சற்று பரபரப்பு காணப்பட்டது.
பாஜக கட்சியின் சார்பில் திரிபுரா மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் பிப்லப் டெப். இவர் நேற்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது இளைஞர்கள் தங்களது உடம்பை பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு நல்ல நிலையில் ஆரோக்கியத்துடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும். நான் கூட தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார்.
தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் 150 புஷ்-அப் களை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். உடனே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர் ஒருவர் இப்போது 45 புஷ்-அப் செய்து காட்ட முடியுமா என்று சவால் விட்டார்.
அந்த சவாலை உடனே ஏற்று நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் பொது மேடையிலேயே
45 புஷ்-அப் களை செய்து காட்டி சவாலில் வெற்றி பெற்றார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முதல்வரை வெகுவாக பாராட்டினர்.
Advertisement
Advertisement