இந்தியா

பயங்கரவாதிகளின் அத்துமீறல்.! இந்திய ராணுவ வீரர் வீரமரணம்.! பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்தியப்படை.!

Summary:

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் புட்காம் பகுதியில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் புட்காம் பகுதியில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் புட்காம் பகுதியில் நேற்று இரவு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில காவலர்கள், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 


என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை இந்திய ராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் மன்சூர் அஹமத் வீரமரணம் அடைந்துள்ளார்.


Advertisement