அரசியல் தமிழகம்

தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் இரண்டு மனைவிகள்.! மூன்றாவது மனைவியால் கணவனுக்கு காத்திருந்த ஆப்பு.!

Summary:

தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் இரண்டு மனைவிகள்.! மூன்றாவது மனைவியால் கணவனுக்கு காத்திருந்த ஆப்பு.!

மத்திய பிரதேசத்தின் சிங்ரவ்லி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்தின் செயலாளராக இருப்பவர் சுக்ராம் சிங். இவருக்கு குசும்காலி மற்றும் கீதா சிங் என இரு மனைவிகள் உள்ளனர். இந்தநிலையில் பிபர்காட் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக அவரது இரண்டு மனைவிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்  பஞ்சாயத்து தேர்தலில் சுக்ராம் சிங்கின் மூன்றாவது மனைவியும் போட்டியிடுகிறார். தனக்கு மூன்றாவதாக ஊர்மிளா என்ற மனைவி இருப்பதை வெளியே தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார் சுக்ராம் சிங்.

இதனையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுக்ராம் சிங்குக்கு  பஞ்சாயத்து தலைமை செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அரசு ஊழியரை பணியிடைநீக்கம் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Advertisement