அச்சோ 3 உயிர் போச்சே... புதுமணத் தம்பதியின் ஆசையால் பலியான 3 உயிர்கள்... காவல்துறை விசாரணை.!



three-people-lost-life-including-newly-wedded-couple-be

செல்ஃபி மோகத்தால் கேரளாவை சேர்ந்த  புதுமண தம்பதி உட்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்களது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சித்திக் மற்றும் நவ்ஃபியா தம்பதி. இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினரான அன்சில் வீட்டிற்கு விருந்திற்காக வந்துள்ளனர்.

Indiaமதிய விருந்தை முடித்த பின்னர் புதுமணத் தம்பதிகளும் அன்சில் குடும்பத்தாரும் அருகில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பாறையில் ஏறி திருமணத் தம்பதி செல்பி எடுத்துள்ளனர். எதிர்பாராத விதமாக கால் வழுக்கி இருவருமே ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் .

Indiaஇதனைக் கண்டு பதறிய அன்சில் அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்திருக்கிறார். அப்போது வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் இறந்த மூவரது உடல்களையும்  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.