3 முட்டையின் விலை இத்தனை ஆயிரமாம்! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

3 முட்டையின் விலை இத்தனை ஆயிரமாம்! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.


three-boiled-egg-cost-rs-1672

மூன்று அவிச்ச முட்டைக்கு ரூபாய். 1672 வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பிரபல ஹிந்தி பாடகரும், இசை அமைப்பாளருமான ஷேகர் ராவ்ஜியானி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்: அகமதாபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்ஸியில் தான் மூன்று அவிச்ச முட்டைகளை ஆர்டர் செய்ததாகவும் பின்னர் அந்த முட்டைக்கான பில், ஜி.எஸ்.டி வரி, சேவை வரி உட்பட பல வரிகளுடன் சேர்த்து 1672 ரூபாய் வந்ததை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Mystery

வெறும் மூன்று முட்டைகளுக்கு இவ்வளவு தொகையா? என பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர். இதேபோல் பிரபல ஹிந்தி நடிகர் ராகுல் போஸ் சில மாதங்களுக்கு முன்னர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரண்டு வாழைப்பழங்களுக்கு ரூபாய். 422 வசூலித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த விஷயமும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர், குறித்த நட்சத்திர ஹோட்டலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.