மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
விடுதி அறையில் பயங்கரம்.. கல்லூரி மாணவி டிக் டாக் நடிகரால் பாலியல் பலாத்காரம்.. பேரதிர்ச்சி தகவல்.!

டிக் டாக்கில் பிரபலமாக ஆவது எப்படி என சொல்லித்தருகிறேன் என்று அழைத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிக் டாக் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் வினீத் (வயது 25). இவன் டிக் டாக் நடிகனாவான். டிக் டாக் உலகில் வினீத்-க்கு பல பின்தொடர்பாளர்கள் இருப்பதால், அவன் பதிவு செய்யும் வீடியோ நொடியில் வைரலாகிவிடும். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக வினீத் கொல்லம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இருவரும் பேசி பழகி வந்த நிலையில், அவ்வப்போது வீடியோ கால் பேசியுள்ளனர். அப்போது, மாணவிக்கு தெரியாமல் காமுகன் ஆபாசமாக பட எடுக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டிக் டாக்கில் எப்படி பிரபலமடையலாம் என்று சொல்லித்தருகிறேன் என கூறி வீட்டிற்கு வரவழைத்துள்ளான். திருவனந்தபுரத்திற்கு வந்த மாணவியை விடுதிக்கு அழைத்து சென்ற காமுகன், அங்கு வைத்து ஆபாச படத்தை காண்பித்துள்ளான்.
மேலும், விடுதி அறைக்குள் வைத்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை மிரட்டலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மாணவி திருவனந்தபுரம் கம்பானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், கயவனின் செல்போனில் இருந்து மேலும் சில இளம்பெண்களின் ஆபாச புகைப்படம் மற்றும் விடியோக்கள் இருந்துள்ளன. இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.