குளு குளுனு ஏசி.. சுட சுட நூடுல்ஸ்.! திருட சென்ற இடத்தில் கொள்ளையர்கள் குதூகலம்.! அதிர்ச்சியில் போலீசார்கள்!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் பாபுல் சிங். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் தனது சிகிச்சைக்காக குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றுள்ளார். இதை தெரிந்து கொண்ட திருட்டுக்கும்பல் ஒன்று லக்னோவில் யாரும் இல்லாத அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே திருட சென்றுள்ளனர்.
வீடு புகுந்து கொள்ளைடிக்க சென்ற அவர்கள் நுழைந்ததும் ஏசியை போட்டு அமர்ந்துள்ளனர். பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அலசி மூட்டை கட்டியுள்ளனர். இந்நிலையில் அவர்களது கண்ணில் நூடுல்ஸ் பாக்கெட் தென்பட்டுள்ளது. உடனே அவர்கள் அதனை சமைத்து சுட சுட சாப்பிட்டுள்ளனர். பின்னர் படுத்து, உறங்கி ஓய்வெடுத்த பின்பு மறுநாள் குளித்து பிரஷ்ஷாக கட்டிய மூட்டைகளை திருடிகொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பாபுல் சிங்கின் வீட்டு கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனே அவரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வீட்டின் உள்ளே ஆய்வு செய்துள்ளனர். அங்கு திருடர்கள் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விசாரணையில் தங்க நகைகள் அனைத்தும் தங்களிடம் பத்திரமாக இருப்பதாக பாபுல் சிங் கூறியதை தொடர்ந்து போலீசர்கள் திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதுக்குன்னு இப்படியா…? மகனின் சேட்டை தாங்கமுடியாமல் தாய் செய்த கொடூர செயல்! குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்...
இதையும் படிங்க: திருடர்கள் செய்யுற வேலையா இது! வந்த வேலையை மறந்துட்டு வீட்டில் என்னென்ன செய்துள்ளனர் பாருங்க! அடுத்து நடந்த அதிர்ச்சி செயல்!