BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருட சென்ற இடத்தில் கண்ட காட்சி.! மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வந்தவர் வினய் குமார் சாகு. 28 வயது நிறைந்த அவர் பொறியியல் படிப்பு முடித்த நிலையில் அரசு பணிக்காக தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். மேலும் அதற்காக பல தேர்வுகளையும் எழுதி வந்துள்ளார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை.
திருட சென்ற இடத்தில் கண்ட காட்சி
இந்நிலையில் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட துவங்கினார். அக்கம்பக்கத்து வீடுகளில் செல்போன் மற்றும் பணம் போன்றவற்றை திருடியுள்ளார். தொடர்ந்து அவர் திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தம்பதியினர் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை கண்ட அந்த வாலிபர் உடனே தனது செல்போனில் அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சாலையில் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல்.. நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

பணம் கேட்டு மிரட்டல்
பின்னர் கடந்த 17ஆம் தேதி அந்த வாலிபர் தம்பதியினருக்கு போன் செய்து ரூ.10 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையெனில் நீங்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். உடனே அந்த தம்பதியினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு காதலி வற்புறுத்தியதால் சோகம்; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!