BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பாதிரியாரால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற 15 வயது சிறுமி.! தற்போது சிறையில் இருக்கும் பாதிரியாரை திருமணம் செய்ய விருப்பம்.!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூரை சேர்ந்தவர் ராபின் வடக்கும் சேரி. 40 வயது நிரம்பிய இவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரார்த்தனைக்கு வந்த 15 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி கர்ப்பிணியானார்.
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்த தகவல், அக்கம் பக்கத்தினர் மூலம் தெரியவந்தது. பின்னர் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து விசாரணையில், பாதிரியார்
ராபின், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், பாதிரியாரின் மிரட்டலுக்கு பயந்து சிறுமியின் பெற்றோர் வெளியில் தெரியாமல் மறைத்த தகவலும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து பாதிரியார் ராபினை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பாதிரியார் கண்ணூர் சென்டிரல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாதிரியார் ராபின் திடீரென சிறுமியின் சம்மதத்துடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டேன் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்டவருக்கு, தற்போது 20 வயதானது. இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சிறையில் உள்ள பாதிரியார் ராபினை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நானும் எனது குழந்தையும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறோம். எனவே ராபினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.