வகுப்பறையில் பானையில் இருந்த தண்ணீரை குடித்த மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்.. தீண்டாமையின் உச்சம்..!

வகுப்பறையில் பானையில் இருந்த தண்ணீரை குடித்த மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்.. தீண்டாமையின் உச்சம்..!


The teacher beat the student who drank the water from the pot in the classroom.. The height of untouchability..!

பள்ளிகூடத்தில் இருந்த குடிநீர் பானையை தொட்ட பட்டியலினத்தை சேர்ந்த மாணவனை ஒரு ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். 

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை உள்ள 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இந்திர மேக்வல் அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளியில் படித்து வருகிறான். இந்நிலையில், இந்திர மேக்வல் கடந்த மாதம் 20-ஆம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையில் இருந்து தண்ணீரை குடிக்க எடுத்துள்ளார். 

இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் (40), தண்ணீர் பானையை தொட்டதற்காக மாணவன் இந்திர மேக்வலை கடுமையாக தாக்கினார். பட்டியலினத்தல சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்ட மாணவனை  ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார். ஆசிரியர் அடித்ததில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மேக்வல் மயக்கமடைந்துள்ளான். பிறகு அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

மாவட்ட மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவன் மேக்வல் சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் இந்திர மேக்வல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் ஷாயில் சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.