இந்தியா

ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்க 22கிமீ பயணம் செய்த குரங்கு.! வெளியே வரமுடியாமல் தவித்துவரும் ஆட்டோ ஓட்டுனர்.! என்ன காரணம்.?

Summary:

ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்க 22கிமீ பயணம் செய்த குரங்கு.! வெளியே வரமுடியாமல் தவித்துவரும் ஆட்டோ ஓட்டுனர்.! என்ன காரணம்.?

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு குரங்கு ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனையடுத்து  பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த குரங்கை பிடிப்பதற்காக வனத்துறையினர் பள்ளிக்கு வந்தனர். ஆனால் அந்த குரங்கை பிடிப்பதற்கு வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்தநிலையில், வனத்துறையினருக்கு அந்த குரங்கை எளிதாக பிடிக்க முடியாத காரணத்தால் அந்த ஊர் பொது மக்களை வனத்துறையினர் உதவிக்கு அழைத்தனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன் என்பவர் அந்த குரங்கை திசை திருப்பி பிடிக்க முயன்றார். இதனால் கடும் கோபம் அடைந்த குரங்கு ஜெகதீசன் மேல் பாய்ந்து பயங்கரமாக தாக்கியது.

அந்த குரங்கை பிடிப்பதற்கு ஜெகதீசன் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதையடுத்து வனத்துறையினர் குரங்கை பிடித்து 22 கிலோ மீட்டர் தொலைவில் குரங்கை விட்டு வந்துள்ளனர். ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் குரங்கு அந்த ஆட்டோ ஓட்டுனரை தேடி வந்து ஆட்டோவின்மேல் குதித்து ஆட்டோவின் கவரை நாசமாக்கி ஜெகதீசனை தாக்கியுள்ளது. இதனால் பயந்துபோன ஜெகதீசன் வீட்டிற்குள் ஓடி கதவை சாத்தியுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஏழு நாட்கள் கடந்த நிலையிலும் அந்த குரங்கு அவரது வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்.


Advertisement