அடப்பாவமே... மனைவியை கொன்று இரண்டு துண்டுகளாக்கி காட்டில் வீசிய கணவன்... வெளியான பரபரப்பு தகவல்..!

அடப்பாவமே... மனைவியை கொன்று இரண்டு துண்டுகளாக்கி காட்டில் வீசிய கணவன்... வெளியான பரபரப்பு தகவல்..!


the-husband-who-killed-his-wife-and-threw-her-into-two

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாதோல் பகுதியை சேர்ந்தவர்கள் ராம் கிஷோர்- சரஸ்வதி தம்பதியினர். இந்த தம்பதி இருவருக்கும் இடையே குடும்பச் சண்டை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சரஸ்வதியை காணவில்லை என்று அவரது தம்பி காவல் நிலையத்தில் கடந்தஸ13 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஷாத்தோல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மோப்பநாய் உதவியுடன் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் தலை மற்றும் உடல் கண்டெடுக்கப்பட்டது.

Murder

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது காணாமல் போன சரஸ்வதியின் உடல் என்றும் மேலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அவரது கணவர் ராம் கிஷோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தனது மனைவி சரஸ்வதியை கோடாரியால் இரண்டு துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக ராம் கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராம் கிஷோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது