தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
குடிபோதையில் குடும்பச்சண்டை: மனைவியின் கன்னத்தை கடித்துக்குதறிய கணவன்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சணகன்னடா மாவட்டத்தைச் சார்ந்த நபர் சுரேஷ் (வயது 55). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். மது போதைக்கு அடிமையான சுரேஷ் எப்போதும் மதுபானத்தை அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டையில் இருவரும் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து, ஆத்திரமடைந்த சுரேஷ் தனது மனைவியின் கண்ணம் மற்றும் கண்களை கடித்து வைத்து இருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர். தாயை காப்பாற்ற வந்த மகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.