சினிமா

கண்ணிமைக்கும் நொடியில் முழுவதும் மூழ்கி காணாமல் போன வீடு! வைரலாகும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

Summary:

கண்ணிமைக்கும் நொடியில் அப்படியே மூழ்கி காணாமல் போன வீடு! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி,கோழிக்கோடு, கோட்டயம், திருச்சூர், பட்டணம்திட்டா, போன்ற  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பேரிடர் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பல பகுதிகளில் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் அப்படியே சரிந்து, நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுள்ளது. அதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போர் மனதை பதைபதைக்க வைத்துள்ளது.


Advertisement