தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ராவணனின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்த மக்கள்.! மக்களை திடீரென திருப்பி தாக்கிய ராவணன்.! ஷாக் வீடியோ.!
உ.பி., மாநிலம் முசாபர்நகரில் தசரா பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறும். இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை நினைவுகூரும் வகையில், பெரிய திடல்களில் வைக்கோல் மற்றும் காகித அட்டைகள், பட்டாசுகளால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பது வழக்கம்.
அங்கு உருவ பொம்மை எரியும் காட்சியை மக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளிப்பார்கள். அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி திடலில் நேற்று இரவு ராவணனின் உருவ பொம்மையை உள்ளூர் மக்கள் தீயிட்டு எரித்து கண்டு களித்தனர்.
मुज़फ़्फ़रनगर में अपने को जलाए जाने से क्रुद्ध रावण ने मौक़े पर मौजूद लोगों पर अग्नि-वाण चलाए 😬 pic.twitter.com/zuDmH3dKXa
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) October 5, 2022
அப்போது, திடீரென அந்த பொம்மையினுள்ளே பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் சிதறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி வரிசையாக பாய்ந்து வந்தன. இதைகண்டு பொதுமக்களும், பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரும் திடீரென அதிலிருந்து தப்பிக்க ஓட்டம்பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.