மீண்டும் முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடுங்கள்: மாநில அரசுகளை எச்சரித்த மத்திய அரசு..!

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடுங்கள்: மாநில அரசுகளை எச்சரித்த மத்திய அரசு..!



The central government has said that the state governments should advise people to wear face masks to prevent the spread of corona virus

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள் என்றும், மேலும் இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸை ஒத்துள்ளது என கூறப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது என்றும், இந்த வைரஸ், சீனாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. 

இந்தியாவிலும், இந்த பிஎப்.7 வைரஸ், நுழைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் குஜராத்தில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்து கூறியுள்ளது. மேலும் ஒடிசாவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா கூறியதாவது, கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும், கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினார். 

புதிய வகை கொரோனா பரவலை தீவ்ரமாக கண்காணித்து வருகிறோம் . புதிய கொரோனா வைரஸ் வகையை கண்டறிய சோதனைகள் நடந்து வருகிறது. கொரோனா தொற்று விகிதம் இந்தியாவில் குறைந்து வருகிறது. மேலும், சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது, என்று தெரிவித்தார்.