ஜூனியர் குத்து சண்டை வீராங்கனை மீது துப்பாக்கி சூடு நடத்திய சிறுவர்கள்... காதலை ஏற்க மறுத்ததால் நடந்த விபரீதம்..!

ஜூனியர் குத்து சண்டை வீராங்கனை மீது துப்பாக்கி சூடு நடத்திய சிறுவர்கள்... காதலை ஏற்க மறுத்ததால் நடந்த விபரீதம்..!


The boys shot at the junior boxer... Tragedy happened because they refused to accept love..

குவாலியரில் காதலை ஏற்காததால் ஜூனியர் வீராங்கனையை துப்பாக்கியால் சுட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம், குவாலியரை சேர்ந்த ஜூனியர் குத்துச்சண்டை வீராங்கனை (14), குவாலியரில் உள்ள தருண் புஸ்கர் ஸ்டேடியத்தில் தினசரி பயிற்சியை முடிந்து விட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்கள், அந்த பெண்ணை வழிமறித்தனர். 

அவர்களில் ஒருவன், அந்த சிறுமியை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால் துப்பாக்கியின் தோட்டாக்கள் அந்த சிறுமியின் மீது படவில்லை. அப்போது, அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், அவர்கள் மூன்று பேரும்  அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி, மூன்று சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரும் சிறுவர்கள். அவர்களில் ஒருவன், சிறுமியை காதலித்துள்ளான் ஆனால் அந்த சிறுமி அதை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கியால் சிறுமியை சுட்டுள்ளான். அவர்களுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.