நம்பி வந்த காதலியை நண்பர்களுடன் சீரழித்த காதலன்.. கவுன்சிலிங்கில் வெளியான உண்மை... 5 பேர் அதிரடி கைது.!the-boyfriend-who-ruined-his-trusting-girlfriend-with-h

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டு வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 கேரள மாநிலம் பத்தனதிட்டா பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ்(19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது காதலியை தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறி ஆளில்லாத இடத்திற்கு அழைத்து வந்துள்ளார் .

Indiaபின்னர் அவருடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது நண்பர்களையும் அந்த இடத்திற்கு அழைத்து இருக்கிறார் சுமேஷ்.  அவரது அழைப்பின் பேரில் அங்கு வந்த சுமேசின் நண்பர்களான அனூப் (22),சக்தி(18),அபிஜித்(20)  மற்றும் அரவிந்த்(28) ஆகியோரும் மாணவியை  மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

Indiaஅவர்களுக்கு பயந்து இதனைப் பற்றி மாணவி யாரிடமும் தெரிவிக்காத நிலையில்  பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு  குழந்தைகள் அமைப்பினர் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். அவர்களிடம் மாணவி தனக்கு நேர்ந்ததை கூறி இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் அமைப்பினர் இது தொடர்பாக அடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சுமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.