நாடே காத்திருந்த அடுத்த மூவ்.! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

நாடே காத்திருந்த அடுத்த மூவ்.! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!!



The Aditya L1 spacecraft, which was launched to study the Sun, has now successfully completed its second orbit.

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலமானது தற்போது வெற்றிகரமாக இரண்டாவது சுற்று வட்ட பாதைக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி57 ராக்கெட் உதவியுடன் பயணித்த ஆதித்யா எல் 1 விண்கலமானது 649 கிலோமீட்டர் தொலைவில் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி உந்துவிசை அளிக்கப்பட்ட நிலையில் விண்கலமானது முதல் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் ஆதித்யா எல் 1  விண்கலமானது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் பெங்களூரு இஸ்ரோ கட்டளை மையம் அந்தமான் போர்ட் பிளேயரில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக, ஆதித்யா எல் 1  விண்கலத்தின் அடுத்த சூழ்ச்சி செப்டம்பர் 10, 2023 அன்று மதியம் 02:30 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.