இந்தியா

கணவன் ஓரினசேர்க்கை உல்லாசம்.. ஹனிமூனில் காண்டன மனைவி பரபரப்பு காரியம்.!

Summary:

கணவன் ஓரினசேர்க்கை உல்லாசம்.. ஹனிமூனில் காண்டன மனைவி பரபரப்பு காரியம்.!

ஓரினசேர்க்கை ஆர்வம் கொண்டவன் பெண்ணை திருமணம் செய்து, அவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மனைவி விவாகரத்து மற்றும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தினை சேர்ந்த 29 வயது பெண்மணிக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த 32 வயது நபருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணம் கடந்த நவம்பர் 2021-ல் நடைபெற்று முடிந்தது. திருமணத்தை தொடர்ந்து தம்பதிகள் முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தனக்கு சோர்வாக இருப்பதாக மணமகன் முதலிரவை தள்ளிவைத்துள்ளார்.

பல கனவுடன் காத்திருந்த பெண்மணிக்கு ஏமாற்றம் மிஞ்சிய நிலையில், கணவரின் பேச்சுக்கு சம்மதித்து அமைதியாக இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, பல நாட்கள் ஆகியும் கணவர் மனைவியுடன் கூடாமல் இருந்த நிலையில், மனைவியோ கணவர் பயம்கொள்கிறார் என நினைத்து தேனிலவு பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அங்கும் ஏதும் நடக்காத நிலையில், சந்தேகமடைந்த மனைவி கணவரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். 

அப்போது, கணவரின் செயல்பாடுகள் ஓரினசேர்க்கை ஆர்வலரின் நிலையை ஒத்துள்ளது போல இருக்கவே, அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்து அதனை உறுதியும் செய்துள்ளார். இதனால் பெரும் ஆத்திரமடைந்த மனைவி, தனக்கு விவாகரத்து மற்றும் நஷ்ட ஈடாக வருடத்திற்கு தலா ரூ.14 இலட்சம் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். 

மேலும், விசாரணையில் தொழிலதிபரான 32 வயது ஆண் பல்வேறு ஓரினசேர்க்கை செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து, தன்பாலின ஈர்ப்பாளர்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் அம்பலமானது. பல்வேறு வாட்சப் உரையாடல்களும் அதற்கு ஆதாரமாய் விளங்கியுள்ளன. 

இந்த விஷயத்திற்கு பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, இதுகுறித்து வெளியே கூறினால் என்னைப்பற்றி 4 விதமாக பேசுவார்கள். நீ என்னுடன் தான் இருக்க வேண்டும் என கத்தி முனையில் கணவன் மிரட்டியும் இருக்கிறான். பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறையில் அடைத்துள்ள நிலையில், பெயில் கேட்டு கணவன் தொடுத்த வழக்கும் ரத்தானது.


Advertisement