மகள் திருமணத்திற்காக ரத்தம் சிந்தி சேர்த்த ₹.2 லட்சம்.. கரையானால் கரியாகிய பரிபாதம்.!

மகள் திருமணத்திற்காக ரத்தம் சிந்தி சேர்த்த ₹.2 லட்சம்.. கரையானால் கரியாகிய பரிபாதம்.!


termites-who-ruined-2-lakh-money

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரை  சேர்ந்த விவசாயி ஆதிமூலம் லக்ஷ்மணா. இவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை ஒரு இரும்பு பெட்டியில் சேமித்து வைத்துள்ளார்.

Andira

இந்நிலையில், நேற்று முன்தினம் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்துள்ள பணம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக, இரும்பு பெட்டியை திறந்தபோது அவருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இரும்பு பெட்டிக்குள் கரையான்கள் இருந்ததாக தெரிகிறது.

Andira

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி, பெட்டியை தலைகீழாக கவிழ்த்து பார்த்த போது உள்ளே இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை கரையான்கள் கடித்து துண்டு துண்டாக சேதப்படுத்தியிருந்தன. இதனால் வேதனையடைந்த விவசாயி ஆதிமூலம் லக்ஷ்மணா, என்னுடைய அறியாமையின் காரணமாக நான் இப்படி நஷ்டமடைந்து விட்டேன். என்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய நிலையை கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.