நாட்டையே உலுக்கிய பிரணாயின் கொடூர ஆணவக்கொலை! அம்ருதாவின் தந்தை திடீர் தற்கொலை! இதுதான் காரணமா?

telungana mrutha father commits suicide


telungana-mrutha-father-commits-suicide

தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் பிரணாய் குமார் மற்றும் அம்ருதவர்ஷினியும். இவர்கள் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்துள்ளார். அதனை தொடர்ந்து கல்லூரியில் ஒன்றாக படித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வீட்டில் கூறியபோது இருகுடும்பத்தாரும் வெவ்வேறுசமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அம்ருதவர்ஷினி மற்றும் பிரணாய் குமாரும் கடந்த 2018 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து பிரணாய் குமாரின் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டநிலையில் இருவரும் பிரணாய் குமார் வீட்டில் தங்கியுள்ளனர்.இந்நிலையில் அம்ருதவர்ஷினி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் இருவரும் தெலுங்கனாவின் நல்கொண்டா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.

amrutha

பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோது அவர்களை பின்தொடர்ந்து வந்து சுபாஷ் சர்மா என்ற கூலிப்படை கொலையாளி, பிரணாயை தாக்கி, கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.  இதில் சம்பவ இடத்திலேயே பிரணாய் துடிதுடிக்க உயிரிழந்தார். இந்த சம்பவம் 2018 ஆம் ஆண்டு இந்திய முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த கொலைக்கு காரணம் அம்ருதாவின் அப்பா மருதி ராவ்தான் என தெரியவந்தது. அவர் தெலுங்கானாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர். நிறைய தொழில்களை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரணாய் கொலைவழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடலாம் என்ற பயத்தில் இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது.