அப்படியே விட்ருந்தா உயிரே போயிருக்கும்!! 5 நிமிடம் நின்றுபோன இதயம்.. இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்.. வைரல் வீடியோ..



Telungana constable saves young man bumping his heart viral video

சாலை விபத்தில் சிக்கி இதய துடிப்பு நின்றுபோன இளைஞரை போலீசார் ஒருவர் முதல் உதவி சிகிச்சை வழங்கி உயிரை காப்பாற்றிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெலுங்கானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் பொம்மக்கள் அருகே அப்துல்கான் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக மோதியது. இதில் அப்துல்கான் மயங்கி கீழே விழுந்தார்.

இதில் அவரது இதய துடிப்பு நின்றுவிடவே, அருகில் இருந்த காவலர் ஒருவர் ஓடிவந்து அந்த இளைஞரின் நெஞ்சில் கைவைத்து 5 நிமிடம் வரை அமுக்கி, மீண்டும் இதய துடிப்பை வரவைத்து அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேலும், துரிதமாக செயல்பட்டு இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பொது மக்களும், உயரதிகாரிகளும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.