கல்லூரி மாணவி தற்கொலை; தற்கொலை கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.. மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட பரிதாபம்.!Telangana Warangal College Girl Suicide 


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டம், ஹிம்பரம் ஷிவானி ஜூனியர் கல்லூரியில் பயின்று வரும் மனைவி சாஹித்யா. நேற்று மாணவி தனது கல்லூரி வளாகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், மாணவி தனது தோழி ஒருவருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. 

அந்த கடிதத்தில், "உன்னிடம் சொல்லாமல் சென்றதற்கு ஏனண்ணை மன்னித்துவிடு. நீதான் என் உயிர் தோழி. நான் கடந்த 3 மாதங்களாக நலமுடன் இல்லை. எனது மூளை ஒட்டுமொத்தமாக இறந்து வருகிறது. அதனால்தான் எல்லாம். உன்னிடம் நட்பாக பழகிய யாரும் உன்னைவிட்டுச்செல்ல நினைக்கமாட்டார்கள்" என கூறியுள்ளார். 

தற்போது தற்கொலை செய்த மாணவியுடன் கடந்த 3 மாதத்திற்குள் மட்டும் 25 பேர் இதே கல்லூரியில் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.