ரூ.1000 பிரியாணிக்கு மருத்துவமனை பில் ரூ.1 இலட்சம்.. திருமண நாள் விருந்தால் சோகம்.!Telangana Shadnagar Wedding Anniversary Feast Biryani Tragedy  

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சாத் நகர் மாவட்டம், அப்பர்டெட்குடா கிராமத்தை சேர்ந்தவர் வலி நரேந்திரன். இவருக்கு கடந்த மே 22 ம் தேதி திருமண நாள் வந்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள சாயிபாபா பேமிலி ரெஸ்டாரண்டில், குடும்பத்தினருடன் மண்டி பிரியாணி சாப்பிட்டு இருக்கிறார். 

பிரியாணியால் வந்த வினை

பின் இவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு ஒருவர்பின் ஒருவராக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர். மேலும், வாந்தி, பேதி, மயக்கம் என அடுத்தடுத்து பலரும் அவதிப்பட்டதால், ஷம்ஷாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: விஷமாக மாறிய மயோனைஸ்.. குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் பலி.!! 85 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!

ரூ.1 இலட்சம் பில்

அங்கு இவர்கள் அனைவர்க்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக இவர்களின் குடும்பத்திற்கு மருத்துவ செலவாக ரூ.1 இலட்சம் பில் வைத்துள்ளது. அதனை செலுத்தியுள்ள குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கூகுள் மேப் காட்டிய வழியால் கால்வாயில் பாய்ந்த கார்.. இன்ப சுற்றுலாவில் திகில் சம்பவம்.!