திடீரென வேலையை விட்டு நீக்கிய முதலாளி.. ஆத்திரத்தில் இளைஞர் போட்ட மாஸ்டர் பிளான்.!telangana-seven-burglars-held-with-1crore-money-from-employer-layoff

தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தை அடுத்த பாலா ரெட்டி நகரை சேர்ந்தவர் அசாரூதின் அகமது. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அசாரூதினிடம் கடந்த 2 ஆண்டுகளாக முகமத் அஷ்வத் என்பவர் கார் ஓட்டுனராகவும், மிஸ்ரா அஸ்வஷ்க் என்பவர் தோட்ட பணியாளராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக அவர்கள் இருவரையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளார் அசாரூதின் அகமது. இதனால் ஆத்திரமடைந்த முகமது அஷ்வத் மற்றும் மிஸ்ரா அஸ்வஷ்க் ஆகியோர் முதலாளியை பழிவாங்க மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார்.

அதன்படி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து முகமது அஷ்வத் மற்றும் மிஸ்ரா அஸ்வஷ்க் ஆகியோர் முதலாளியின் வீட்டில் கொள்ளை அடித்துள்ளனர். அதனையடுத்து போலீசார் முகமது அஷ்வத், மிஸ்ரா அஸ்வஷ்க் மற்றும் அந்த 6 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1.28 கோடியை பறிமுதல் செய்தனர்.