மனைவி திட்டியதால் சோகம்; வீபரீத முடிவெடுத்த கணவனால் சோகத்தில் குடும்பத்தினர்.!



Telangana Man Suicide 

 

சிறுசிறு காரணங்களுக்காகவும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது. தேவையற்ற காரணங்களுக்காகவும் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொருட்லா நகரைச் சேர்ந்தவர் நரேஷ். இவரது மனைவி நரேஷை திட்டியதால் மனம் உடைந்த அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

Telangana

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் மனைவி கோபத்தில் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.