கடன் தொல்லையால் விபரீதம்; ஆட்டோ ஓட்டுநர் இரயில் முன்பாய்ந்து தற்கொலை.!

கடன் தொல்லையால் விபரீதம்; ஆட்டோ ஓட்டுநர் இரயில் முன்பாய்ந்து தற்கொலை.!


Telangana Hyderabad Auto Driver Suicide 

 

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி அகற்றப்பட்டு, அங்கு காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை அமைந்தது. 
 
ஆட்சிமாற்றம் ஏற்பட்டதில் இருந்து அங்கு பல்வேறு மாற்றங்கள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என பல சலுகைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

இதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களால் வாங்கிய கடனுக்கு வட்டி மற்றும் அசல் ஆகிய தொகைகளை செலுத்த இயலாமல் பரிதவித்துப்போயினர். 

ஒருசில ஆட்டோ ஓட்டுனர்கள் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்ய தொடங்க, தற்போது வரை அம்மாநில அளவில் 31 ஆட்டோ ஓட்டுனர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டனர். 

இந்நிலையில், ஹைதராபாத் மேட்சல் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ் குமார் (வயது 47), இரயில் முன் பாய்ந்து கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டார்.