குழந்தையை குளியாட்டியபோது வெளியேறிய ஊசி! ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் கண்ட நம்ப முடியாத அதிர்ச்சி காட்சி!Telangana doctors find 11 needles in three-year-old’s body

தெலுங்கானா மாநிலம் வீபநகந்தலா மண்டல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அசோக். அவரது மனைவி அன்னபூர்ணா. இவர்களுக்கு லோக்நாத் என்ற 3 வயது மகன் உள்ளான். இந்நிலையில் அன்னபூர்ணா கடந்த வாரம் தனது மகன் லோக்நாத்தை குளியாட்டியபோது  அவனது கால் தசையில் இருந்து ஊசி ஒன்று வெளியே வந்துள்ளது. இதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சில நாட்களில் குழந்தை நடக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில் மற்றும் சிறுநீரகங்களுக்கு அருகில் 11 ஊசிகள் இருந்துள்ளது.

needle

இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு குழந்தை லோக்நாத் உடலிலிருந்து சில ஊசிகளை மட்டும் வெளியே எடுத்தனர். மற்ற ஊசிகளை உடலிலிருந்து எடுப்பது பெரும் சவாலாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைபடி அன்னபூர்ணா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், தங்களது வீட்டு பக்கத்தில் வசித்து வரும் அலிவேலம்மாமற்றும் அஞ்சி  என்பவர் மீது சந்தேகமாக உள்ளது. அவர்கள் இருவரும்தான் குழந்தையை அடிக்கடி விளையாடுவதற்காக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர் என  தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.