16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம், கொலை.. உடலை தூக்கில் தொங்கவிட்டு சென்ற பயங்கரம்..! தெலுங்கானாவில் பேரதிர்ச்சி..!



Telangana 16 Aged Minor Girl Gang Raped Murdered in his House

 

வீட்டில் தனியே இருந்த சிறுமியை கூட்டாக சேர்ந்து 3 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் சடலமாக தொங்கவிட்ட கொடூரம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹபூப் நகர் மாவட்டம், திருமலாகிரி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

சிறுமியின் சடலத்தை கண்டு பேரதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தற்கொலை செய்ததை போல சடலத்தை தொங்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனால் சந்தேக வளையத்தில் இருந்த இளைஞரின் வீடு & இருசக்கர வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Telangana

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி சம்பவத்தன்று தனியாக இருந்த நேரத்தில் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. 

3 இளைஞர்கள் குழுவில் ஏற்கனவே ஒருவனின் மீது பாலியல் தொல்லை தொடர்பான புகார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவர்கள் கூட்டாக சேர்ந்து சிறுமியிடம் அத்துமீறி கொலை செய்திருக்கலாம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.