உலகம் டெக்னாலஜி

நடுரோட்டில் இளம்பெண்கள் இப்படியா நடந்து கொள்வது- திட்டி தீர்க்கும் சமூக வாசிகள்!

Summary:

technology-tiktak

இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரிடத்திலும் பிரபலமாக இருப்பது இந்த டிக் டாக். சினிமா, சீரியல் என பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் கூட இந்த டிக் டாக் ஆப்பிற்கு அடிமையாகி உள்ளனர். புது புது விடீயோக்கள் போடுவது, ரசிகர்களை கவர்வது என நாளுக்கு நாள் புது புது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல் இரண்டு இளம்பெண்கள் ஒரு ஆண் நண்பருடன் குடித்துக்கொண்டு கும்மாளம் அடிக்கும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.அந்த வீடியோவில் இளம்பெண்கள் நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஒரு ஆண் நபர் ரோஸ் வைத்துக்கொண்டு இருப்பது போன்ற காணொளி ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்த தமிழர் ஒருவர் தனது விருப்பங்களை காணொளியாக உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இளம் பெண்கள் நடுரோட்டில் இவ்வாறு நடந்து கொள்வதற்கு பெற்றோர்கள் தான் முக்கிய காரணம் என கூறியுள்ளார்.

அதாவது பெற்றோர்கள் குழந்தையை வளர்க்கும் விதத்தில் தான் சமுதாயத்தில் அவர்கள் வாழும் விதம் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது அவர்களுக்கு நல்ல விதமான ஒழுங்குமுறைகளையும் கற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி பெற்றோர்கள் வேலை வேலை என்று இல்லாமல் குழந்தைகள் மீதும் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


Advertisement