பொது இடத்தில் அசிங்கமாக நடந்து கொண்ட ஆசிரியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.!

பொது இடத்தில் அசிங்கமாக நடந்து கொண்ட ஆசிரியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.!



Teacher harassment to girls in mall

கர்நாடக மாநிலத்தில் மாலில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தகாத செயலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களிடம் தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அந்தப் பெண் மால் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை தேடிப் பார்க்கையில் அவர் காணவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், போலீசார் ஐபிசி பிரிவு 354 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மாலில் உள்ள பெண்களிடம் முதியவர் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அஸ்வத் நாராயணா என்ற 60 வயது ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.