விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
அதிக மதிப்பெண் தருவதாக கூறி இரண்டு வருடங்களாக மாணவியை கற்பழித்த ஆசிரியர்! பெற்றோர் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு அதிக மதிப்பெண் போடுவதாக கூறி ஆசிரியர் ஒருவர் இரண்டு வருடம் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தகவலை அறிந்த ஊர்மக்கள் அந்த ஆசிரியரை அடித்து நிர்வாணமாக்கி அழைத்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவியை இரண்டு வருடங்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக தோலை கொடுத்ததால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும் அந்தக் கருவைக் கலைப்பதற்காக ஆசிரியர் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு தெரியாமல் கரு களைப்பு மாத்திரையை சாப்பிட மாணவிக்கு அதிகப்படியான வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை சோதித்த மருத்துவர்கள் கூறிய தகவல்களால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அந்த ஊர் மக்கள் அந்த ஆசிரியரை கடுமையாக தாக்கி நிர்வாணமாக காவல்துறைக்கு இழுத்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமிக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி ஆசிரியரே தகாத முறையில் நடந்துகொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.