கை,கால்களை கட்டி இருபெண்களை ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற கும்பல்! ஏன் தெரியுமா? பகீர் வீடியோ இதோ!

கை,கால்களை கட்டி இருபெண்களை ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற கும்பல்! ஏன் தெரியுமா? பகீர் வீடியோ இதோ!



teacher-and-sister-panchayat-leader

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினச்பூர் மாவட்டம் கங்காராம்பூர் அருகே பதாநகர் கிராமத்தில் வசித்துவந்தவர் ஸ்மிரிகோனா தாஸ், இவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது தங்கை சோமா தாஸ்.  அவர்களது தெருவில் 12 அடியில் சாலை அமைக்கவுள்ளதாக பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக ஆசிரியையின் குடும்பம் இடத்தை தருவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் திடீரென 12அடிக்கு பதிலாக 24 அடியில் சாலை அமைக்க பஞ்சாயத்து முடிவு செய்திருந்தது.

 இது அவர்களுக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் தங்களது இடம் அதிகளவில் இழக்கக்கூடும் என எண்ணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்து பஞ்சாயத்து தலைவர் அவரது ஆதரவாளர்களுடன் வந்து சாலை அமைப்பதற்காக, அப்பகுதியில் உள்ள வீடுகளை இடித்துள்ளனர். இதனை கண்டு ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

teacher

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆசிரியை எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்கார் தலைமையில் சிலர், ஆசிரியையை வலுக்கட்டாயமாக தூக்க முயன்றனர். அதுமட்டுமின்றி அவரை அடித்து காலில் கயிறு கட்டி தரதரவென இழுத்து சென்றனர். மேலும் அதை தட்டி கேட்ட தங்கையையும் அவ்வாறு அடித்து உதைத்து கை கால்களை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆசிரியரின் தங்கை சரியாகி விட்டார் ஆனால் ஆசிரியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை ஸ்மிருதிகோனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பெண்கள் கால்களில் கயிறு கட்டித் தர தரவென இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ்  மாவட்டத் தலைவர் அர்பிதா கோஷ், பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்காரை  இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.