இந்தியா

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Summary:

Tamilnadu government announced 1000 for tamilnadu ration card

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பரவிய வைரஸால் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதுமே பெரும் பீதியில் உள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இத்தகைய நடவடிக்கைகளால் பல மக்களது வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


Advertisement