அரசியல் இந்தியா

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த மத்திய அமைச்சர் மரணம்.! தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்.!

Summary:

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய உணவுத்துறை அமைச்சரும், பீகார் மாநில கட்சியான லோக் ஜன்சக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்தநிலையில், மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சைபலனின்றி நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், "ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


Advertisement