அக்னிபத் திட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த தமிழக அரசு: திருப்பூரில் முழுவீச்சில் ஆள் சேர்ப்பு முகாம்..!

அக்னிபத் திட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த தமிழக அரசு: திருப்பூரில் முழுவீச்சில் ஆள் சேர்ப்பு முகாம்..!



Tamil Nadu government has rolled out the red carpet for Agnipath project

மத்திய அரசின், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் அமைக்கும் பணிகளில், தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மண்டலத்தை உள்ளடக்கிய  11 மாவட்ட அளவிலான ஆட்கள் தேர்வு, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி அணைப்புதுார் பகுதியில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் நடந்து வருகிறது.

மாநில அரசின் வழிகாட்டுதல் படி, மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவின் அடிப்படையில் முகாம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகாம் நடக்கும் மைதானத்தில் குடிநீர் தொட்டி வைப்பது,  தண்ணீர் நிரப்புவது, துாய்மைப்பணிகளை மேற்கொள்வது, மைதானத்தில் ஆங்காங்கே வைக்கப்படும் தற்காலிக கழிப்பறையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில், பழங்கரை ஊராட்சி, அருகேயுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்குரிய செலவினங்களை அந்த ஊராட்சி நிர்வாகங்களே, தங்களது பொது நிதியில் இருந்து ஏற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவிநாசி தாசில்தார், முகாம் பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், 100க்கும் மேற்பட்ட உள்ளூர் காவல்துறையினரும் ஆட்கள் சேர்ப்பு முகாமில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.