#Breaking# கள்ள காதல், தகாத உறவு குற்றமில்லை!. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!.

#Breaking# கள்ள காதல், தகாத உறவு குற்றமில்லை!. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!.


supreme court judgement to illegal affairs


உச்சநீதிமன்றத்தில், கணவனை ஏமாற்றி காதலனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

திருமணத்திற்கு பிறகுஆணும், பெண்ணும் காதல் செய்வது, உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றச் செயல் இல்லை எனவும், மேலும் தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை அது குற்றச் செயல் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், கள்ளக்காதல் விவகாரத்தில் ஆண் மற்றும் பெண் சமம் இல்லையே அது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், செக்சன் 497-ன் படி, வேறொரு ஆணின் மனைவியுடன், அந்த ஆணின் சம்மதம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண் மீது மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அந்த ஆண் மீதான குற்ற புகார் உறுதி செய்யப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும் என்றார்.

இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் திருமண உறவிற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் செய்வதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச் செயல் இல்லை. திருமணத்தை தாண்டி தகாத உறவில் ஈடுபடும் ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது'' என்றும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.