மீண்டும் அதிகரித்த கொரோனா..! ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.! பள்ளிகளும் மூடப்படும்.! அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்

மீண்டும் அதிகரித்த கொரோனா..! ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.! பள்ளிகளும் மூடப்படும்.! அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்



sunday full lockdown in madhya predesh

இந்தியாவில் கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில்  கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,592 ஆக உள்ளது.  குணமடைந்தோர் 2.64 லட்சம் ஆக உள்ளது.  எனினும், 3,908 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். 

madhya predesh

மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச அரசு கார்கோன், பெத்துல், சிந்த்வாரா மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்துவதாக அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் நேற்று அறிவித்தார். அதேபோல் மார்ச் 31ம் தேதி வரை இந்த நகரங்களில் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது