சூரத்தில் பயங்கர தீ விபத்து! 20 மாணவர்கள் பரிதாப பலி; தப்பிக்க மாடியிலிருந்து குதிக்கும் கோரமான வீடியோ காட்சிகள்.!

சூரத்தில் பயங்கர தீ விபத்து! 20 மாணவர்கள் பரிதாப பலி; தப்பிக்க மாடியிலிருந்து குதிக்கும் கோரமான வீடியோ காட்சிகள்.!


stydents-jumb-from-floor-due-to-fire-in-surat

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீ பற்றியதில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

சூரத் நகரின் முக்கியமான வீதியில் இருக்கும் வணிக வளாகம் தக்ஷசீலா. இந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. 

Surat fire

இன்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற சமயத்தில் மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தப்பிக்க வழியில்லாமல் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

வகுப்பில் இருந்த ஒரு சில மாணவர்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக குத்தித்துள்ளனர். அவர்கள் வெளியேறும் போது தடுமாறி கீழே விழுவதும் அலறியபடி குதிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Surat fire

கீழே குதித்த மாணவர்கள் உயிர் பிழைத்தார்களா இல்லையா என்ற தகவல் இன்னும் சரிவர கிடைக்கவில்லை. சூரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.