தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த மாணவர்கள்?.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள நரகொண்டனஹள்ளி மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் சமைத்த உணவுகளை பள்ளி குழந்தைகள் சாப்பிட மறுத்ததாக அதிர்ச்சி புகாரானது எழுந்துள்ளது.
ஆனால் இது தொடர்பான புகாரை மறுத்துள்ள மாநில அரசு, சம்பந்தப்பட்ட பள்ளியில் பயின்று வரும் சில மாணவர்கள் தனியாக உணவு கொண்டு வந்திருந்ததால் அவர்கள் மதிய உணவை சாப்பிடவில்லை.
இதற்கும், சாதி ரீதியான பிரச்சனைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியுள்ள தலித் ஆர்வலர்கள் இதுபோன்ற துயரங்கள் அங்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.
இதனால் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவ்வாறான எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்ய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பள்ளியின் சத்துணவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.