ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி! தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி! தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி



sterlite reopen in thoothukudi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுதாக்கல் செய்ததையடுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ஆலையை ஆய்வு செய்ய மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Sterlite

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு எனவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம் எனவும் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை அனுப்பியது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு ஆணையம் மறு அனுமதி உத்தரவை பிறப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் உடனடியாக ஆலைக்கு மின்சாரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.