இறந்தவரை பாடையில் தூக்கி சென்ற போது, உறவினர்களுக்கு அதிர்ச்சி.! 



srikakulam 85 years old men rebirth after death news

இறந்து போன முதியவரை பாடையில் தூக்கிச் சென்றபோது அவர் உயிருடன் எழுந்து வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். 

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்பவர்க்கு 85 வயது ஆகின்றது. வயது முதிர்வினால் இவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. அவர் குடும்பத்தினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Srikakulam

ஆனால், அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் அவர் வீட்டிற்கு வரும்போது உடலில் எந்த விதமான அசைவும் இல்லை. இதனால் அவரை பார்த்த குடும்பத்தினர் இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டனர். 

இதையும் படிங்க: அடுத்தடுத்து உயிரிழந்த 17 பேர்; காஷ்மீரில் நடப்பது என்ன? விதிக்கப்பட்ட தடை.!

எனவே, அவரது இறுதிச் சடங்குகளுக்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து அதனை மேற்கொண்டனர். அனைத்து சடங்குகளும் முடிந்து அவரது உடலை பாடையில் ஏற்றி இருக்கின்றனர். அப்போது, திடீரென அப்பா ராவ் எழுந்து அமர்ந்தார். இதை கண்ட அனைவரும் திகைத்துப் போயினர்.

இதையும் படிங்க: மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்.. ஹைதராபாத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சமபவம்.!