இந்தியா

தனது வேலைக்கான சம்பளத்தை கேட்ட பெண் ஊழியர்! நாயை ஏவி ஓனர் செய்த கொடூர காரியம்!

Summary:

Spa owner booked dog for employee who demand salary

டெல்லி கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் நிகிதா என்பவர் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வந்துள்ளார். இங்கு  சப்னா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சப்னா ஜனவரி மாதம் முதல் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு வரை தான் வேலை செய்ததற்கான சம்பளத்தை நிகிதாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால், சம்பளம் கொடுப்பதற்கு நிகிதா மறுத்துள்ளார். இந்நிலையில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  நிகிதா தான் வளர்த்துவந்த நாயை விட்டு சப்னாவை கடிக்க வைத்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு, சப்னாவின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் அவரது 2 பற்களும் உடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சப்னா கடந்த ஜுன் 11ல் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் நிகிதா தலைமறைவாகி இருந்தார்.  இந்நிலையில் தன்னார்வ அமைப்புகள் சில தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பிறகு   20 நாட்கள் கழித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நிகிதாவை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 


Advertisement