தென்கொரியா யூடியூபருக்கு பாலியல் தொல்லை... அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை...!

தென்கொரியா யூடியூபருக்கு பாலியல் தொல்லை... அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை...!



south-korean-youtuber-sexually-harassed-police-departme

தென்கொரிய யூடியூபர் மியோச்சி இந்தியாவில் நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளதாக தொரிவித்துள்ளார்.  

செவ்வாய்க்கிழமை இரவு மும்பையில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் லிப்ட் கொடுப்பது போல் கட்டாயமாக அவரது கையைப் பிடித்து இழுத்தனர். 

மியோச்சி அவர்களிடம் நோ நோ என்று மறுத்துள்ளார். இதை தொடர்ந்து அவர்களில் ஒரு இளைஞர் அவளை முத்தமிட முயன்றுள்ளார். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றும் அவர்கள் மியோச்சியை பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். வீடு பக்கத்தில் தான் என்று சொன்னபோதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 

இது குறித்த வீடியோவை மியோச்சி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் மியோச்சியிடம் சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து தென் கொரிய யூட்யூபர் மியோச்சி இவ்வாறு கூறியுள்ளார்.

மற்ற நாட்டிலும் இது போன்ற மோசமான சம்பவம் நடந்த போது என்னால் காவல் துறையை அழைக்க முடியவில்லை. ஆனால் இந்தியாவில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளதாக மும்பையில் நேரலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான தென்கொரிய யூட்யூபர் மியோச்சி நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.