வீடியோ காலில் தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன்! அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு!

வீடியோ காலில் தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன்! அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு!



son watch his fathers funeral in video call


நோய்வாய்ப்பட்ட தந்தையை பார்ப்பதற்காக கத்தாரிலிருந்து கேரளா வந்த இளைஞர், கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டதால் கடைசிவரை தந்தையின் முகத்தை பார்க்க முடியாத சோகத்திற்கு ஆளாகியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த லினோ என்பவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்துவந்தார்.  அவரது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இந்தநிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக, கடந்த 8ஆம் தேதி லினோ கேரளம் வந்தார். ஆனால் லினோவுக்கு லேசான இருமல் இருந்ததால், விமானநிலையம் வந்தவுடன் தானாகவே மருத்துவ அதிகாரிகளை அணுகி, கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். 

அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அதேநேரத்தில் லினோவின் தந்தை உடல்நலம் மோசமடைந்ததால் கடந்த 9ஆம் தேதி மரணமடைந்தார். ஆனால் தனது தந்தையை இறுதியாக காண அனுமதிக்குமாறு கெஞ்சியவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஒரே மருத்துவமனையில் இருந்தாலும், தந்தையை பார்க்க முடியாமல் தவித்தார். இறுதியில் தந்தையின் இறுதிச்சடங்கை மொபைல் வீடியோ கால் மூலம் பார்த்த லினோ மருத்துவமனையில் இருந்தவாறே கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

corona

இதனையடுத்து தனது நிலை குறித்து அவர், முகநூலில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், விமான நிலையத்தில் தாமாகவே முன்வந்து மருத்துவக் குழுவை அணுகியிருக்காவிடில், தனது தந்தையை கடைசியாக ஒரு முறையாவது பார்த்திருக்க முடியும் என்றும்.

எனினும் தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றும் தன்னை கொரோனா வைரஸ் தாக்கி இருந்தால், பலருக்கும் பரவிவிடும் என்கிற காரணத்தால், தாமாகவே மருத்துவமனையில் சேர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.