பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!
சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்... 1,2 அல்ல 7 முறை... காதலனை கொன்ற நபரை பழிவாங்க துடிக்கும் பெண் பாம்பு!!

பொதுவாக சினிமாவில் தான் தனது ஜோடி பாம்பை கொன்ற நபரை பழிவாங்க துடிக்கும் மற்றொரு பாம்பு என பார்த்திருப்போம். ஆனால் இங்கு அதேபோல் ஒரு உண்மை சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தெஹ்சில் மிர்சாபூர் பகுதியில் எஹ்சான் அலி. விவசாய வேலை செய்து வரும் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகில் வேலை பார்த்து வந்துள்ளார்.அப்போது அங்கு இரண்டு பாம்புகள் பிண்ணி பிணைந்து கொண்டிருந்தன. இதனை பார்த்த எஸ்சான் அலி அவற்றின் மீது கல்லை விட்டு எரிந்துள்ளார். அதில் ஆண் பாம்பு இறந்துள்ளது. பெண் பாம்பு மட்டும் தப்பித்து சென்றுள்ளது.
இந்நிலையில் சில நாட்கள் கழித்து எஸ்சான் அலி வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது. எஸ்சான் கத்தியதும் உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரும் உயிர் தப்பியுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பாம்பு கடித்துள்ளது அப்போது அக்கம் பக்கத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
இப்படியாக ஏழு முறை பாம்பு கடித்தும் எஸ்சான் அலி உயிர் பிழைத்துள்ளார். இந்நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.