இந்தியா Covid-19

இந்தியாவில் முக்கிய கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மகன் கொரோனாவால் உயிரிழப்பு.!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனோ வைரஸ்க்கு சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவலால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரநா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 34 வயதான ஆஷிஸ் யெச்சூரி முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஷிஸ் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையும் எனது மகனுக்கு சிகிச்சையும் அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.


Advertisement